Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் மரவள்ளித் தொழிற்சாலை அமைக்கும் புதிய திட்டம்! – இரு நாடுகள் முதலீடு

In வணிகம்
Updated: 11:32 GMT, Apr 8, 2018 | Published: 11:32 GMT, Apr 8, 2018 |
0 Comments
1285
This post was written by : Litharsan

இலங்கையில் மரவள்ளித் தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்கு இந்திய மற்றும் சுவீடன் நாட்டு முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் இந்தியஷ, சுவீடன் நாட்டு முதலீட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நிர்மாணிக்கப்படவுள்ள தொழிற்சாலை மூலம் மரவள்ளி மாவாக்கப்பட்டு அதனூடாக சீனி உற்பத்தியை மேற்கொள்ளும் திட்டமாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, மொனராகலை மாவட்டங்களில் மரவள்ளிப் பயிர்ச்செய்கை ஊக்குவிக்கப்படவுள்ளது. 6 ஆயிரம் ஹெக்டயர் காணிகளில் இப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg