Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நச்சுவாயுவை சுவாசித்த இருவர் உயிரிழப்பு

In
Updated: 05:29 GMT, Apr 9, 2018 | Published: 05:29 GMT, Apr 9, 2018 |
0 Comments
1227
This post was written by : Suganthini

வடமேற்கு லண்டனின் எட்ஸ்வெயார் (Edgware) பகுதியில் ஒருவகையான நச்சுவாயுவை சுவாசித்த  இருவர் உயிரிழந்ததுடன், 5 பேர் பாதிப்படைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி பகுதியிலுள்ள வீடொன்றிலேயே, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இதில் ஆண்கள் இருவர் உயிரிழந்ததுடன், 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் பாதிப்படைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணையை முன்னெடுத்துள்ள பொலிஸார், இவர்கள் கார்பன் மொனோக்ஸைட்டை சுவாசித்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும், கூறியுள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக, இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படவில்லையெனவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg