Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸில் ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

In ஐரோப்பா
Updated: 09:48 GMT, Apr 9, 2018 | Published: 09:47 GMT, Apr 9, 2018 |
0 Comments
1043
This post was written by : Suganthini

பிரான்ஸில் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டு ரயில்வே ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

இப்பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக காரணமாக பயணிகள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் பொருளாதாரத்தை நவீனமயப்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் புதிய பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டத்தை கடந்த வருடம் முன்வைத்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்கங்கள் அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துவந்தன. இந்நிலையில், 3 மாதகால பணிப்பகிஷ்கரிப்பை ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்துள்ளனர்.

மேலும், பிரான்ஸில் பொருளாதாரத்தை நவீனமயப்படுத்தும் ஜனாதிபதி மக்ரோனின் முயற்சி பாரிய சவாலாக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg