Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அலபாமா கால்பந்து அணிக்கு வெள்ளை மாளிகையில் அமோக வரவேற்பு

In உதைப்பந்தாட்டம்
Updated: 07:12 GMT, Apr 11, 2018 | Published: 07:12 GMT, Apr 11, 2018 |
0 Comments
1306
This post was written by : Varshini

ஜோர்ஜிய அணியை வீழ்த்தி, கல்லூரிகளுக்கு இடையிலான தேசிய கால்பந்து சம்பியன் பட்டத்தை வென்ற அலபாமா பல்கலைக்கழக கால்பந்து அணிக்கு வெள்ளை மாளிகையில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

தலைமைப் பயிற்சியாளர் நிக் சபான் தலைமையில் குறித்த அணி நேற்று (செவ்வாய்க்கிழமை) வெள்ளை மாளிகைக்குச் சென்றது. இதன்போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமோக வரவேற்பளித்தார்.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இப்போட்டியை, ஜனாதிபதி ட்ரம்ப் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். இதனை நேற்றைய தினம் நினைவுபடுத்திய ட்ரம்ப், அமெரிக்க வரலாற்றில் இந்த வெற்றி சிறப்பானதெனக் குறிப்பிட்டுள்ளார்.

கடின உழைப்பும் சிறந்த தயார்படுத்தலும் இந்த வெற்றிக்கு வழிகோலியதாக குறிப்பிட்ட ட்ரம்ப், அலபாமா அணி குறித்து பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

அலபாமா அணியின் தலைமைப் பயிற்சியாளர் நிக் சபான் குறிப்பிடுகையில், வெள்ளை மாளிகைக்கான அழைப்பு அதிகமானோருக்கு கிடைப்பதில்லை. ஜனாதிபதி ட்ரம்பை சந்திக்கும் வாய்ப்பும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அந்த வகையில் இது சிறப்பான ஒரு தருணமென நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அத்தோடு, அலபாமா அணியின் சாதனைகளுக்கு கிடைத்த சந்தர்ப்பமே இதுவென்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, போட்டி நடைபெற்ற பின்னர் அணி வீரரான Bradley Bozeman, தனது காதலியிடம் முதல்தடவையாக தன் காதலை வெளிப்படுத்தியிருந்தார். நேற்றைய சந்திப்பின்போது இது தொடர்பாகவும் ட்ரம்ப் நகைச்சுவையாக உரையாடினார். ”உங்கள் காதலி இன்னும் உங்களுடன் இருக்கின்றாரா” என்று ட்ரம்ப் சிரித்துக்கொண்டே வினவ, ”அதிஷ்டவசமாக அவர் என்னுடன் உள்ளார்” என Bradley Bozeman பதிலளித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg