Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காற்பந்து ஜாம்பவான் மரடோனாவின் மேலங்கிகள் காட்சிக்கு வைப்பு!

In உதைப்பந்தாட்டம்
Updated: 09:34 GMT, Apr 11, 2018 | Published: 09:34 GMT, Apr 11, 2018 |
0 Comments
1103
This post was written by : Puvanes

உலகக்கிண்ண காற்பந்தாட்ட போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், ரஷ்ய காற்பந்தாட்ட ரசிகர்கள் இதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கமைய நேற்று (செவ்வாய்க்கிழமை) ரஷ்ய பண்பாட்டு இல்லம் என்ற பெயரில் கண்காட்சி நிகழ்வு ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு ரஷ்யாவிற்கான ஆஜண்டீன தூதுவர் விக்டர் கொரோநென்லி மற்றும் ஆஜண்டீன காற்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கண்காட்சியில் ஆஜன்டீனா மற்றும் ரஷ்ய நாட்டு காற்பந்தாட்ட வீரர்களுக்கான மேலங்கிகள் தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் முன்னாள் காற்பந்தாட்ட ஜாம்பவான் டீயாகோ மரடோனாவின் மேலங்கி உள்ளிட்ட ஜாம்பவான்களின் மேலங்கிகளும் காட்சிபடுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இதேவேளை, உலகக்கிண்ண காற்பந்தாட்ட போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ளன.

இந்த போட்டிகளை ரஷ்யாவின் 11 நகரங்களில் நடத்த அந்த நாடு திட்டமிட்டுள்ளது. அதன்படி குறித்த உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடரை நடத்துவதன் மூலம் தமது பொருளாதார பலத்தை உலகுக்கு எடுத்து காட்ட ரஷ்ய முனைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg