Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யானைகள் மீது நீரை வாரியிறைக்கும் திருவிழா

In
Updated: 12:07 GMT, Apr 11, 2018 | Published: 12:07 GMT, Apr 11, 2018 |
0 Comments
1077
This post was written by : Varshini

சோங்ரான் திருவிழா என அழைக்கப்படும் யானைகள் மீது நீரை வாரியிறைக்கும் திருவிழா, தாய்லாந்தின் பழம்பெரும் நகரான அயுதயாவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.

இதன்போது அலங்கரிக்கப்பட்டு அழைத்து வரப்பட்ட யானைகள் மீது, உள்ளூர்வாசிகளும், சுற்றுலாப்பயணிகளும் நீரை வாரியிறைத்து மகிழ்ந்துள்ளனர்.

பதிலுக்கு யானைகளும், தனது தும்பிக்கையினால் மக்கள் கூட்டத்தின் மீது நீரை பீய்ச்சியடித்துள்ளன.

தற்போது வெப்பமான காலநிலை அங்கு நிலவுவதால், ஆண்டு தோறும் இக்காலப்பகுதியில் இவ்வாறான திருவிழாவை ஏற்பாடு செய்வார்கள். இது சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் கவர்வதாக உள்ளது.

இந்த கொண்டாட்டத்தில் சிறியது முதல் பெரியது வரை பல யானைகள் பங்கேற்றிருந்ததுடன், அவற்றின் உடல்கள் முழுவதும் பல வர்ணங்களில் பூக்கள் வரையப்பட்டிருந்தன.

இந்தத் திருவிழாவை பலரும் தமது கைத்தொலைபேசிகளில் ஆர்வமாக படம்பிடித்தனர்.

இது போன்ற திருவிழாக்கள் தென்கிழக்காசிய நாடுகளான மியன்மார், லாவோஸ் மற்றும் கம்போடியாவிலும் கொண்டாடப்படுகின்றமை வழமையாகும்.

தாய்லாந்தில் இந்தத் திருவிழா ஆண்டு தோறும் ஏப்ரல் 13ஆம் திகதிக்கும் 15ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாட்களில் இடம்பெறும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)