Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழருக்கு எதிராகச் செயற்படும் அதிகாரசபை தேவையில்லை – ஜி.ரி.லிங்கநாதன்

In இலங்கை
Updated: 17:27 GMT, Apr 11, 2018 | Published: 17:27 GMT, Apr 11, 2018 |
0 Comments
1755
This post was written by : Litharsan

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இருக்கின்ற பயங்கரவாத தடை சட்டம் மற்றும் அவசரக்காலச் சட்டம் போலவே இன்று மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையும் செயற்படுகின்றது. அவ்வாறு செயற்படின் அப்படிப்பட்ட அதிகார சபையே எமக்குத் தேவையில்லையென வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இருக்கின்ற பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரக்காலம் சட்டம் போலவே அதற்கு இணையாக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையும்எமக்கு எதிராக செயற்படும் ஒரு அமைப்பாகவே நாம் பார்க்கின்றோம்.

உண்மையில் மகாவலி அதிகாரசபை ஒரு இனத்துக்கு மட்டுமானதாக இல்லாமல் ஒட்டுமொத்த மக்களுக்கானதாக மாறவேண்டும். இல்லாவிடில் அப்படி ஒரு அதிகார சபையே தேவை இல்லை” என்று தெரிவித்தார்.

அத்துடன் வவுனியா அரசாங்க அதிபரின் செயற்பாடுகளில் திருப்தியில்லை என்று தெரிவித்த அவர், வவுனியா அரசாங்க அதிபரை மாற்றுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தால் தமிழ் அரசாங்க அதிபர் ஒருவரை நியமிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg