Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸில் ஏயார்லைன் பணியாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு!

In ஐரோப்பா
Updated: 09:41 GMT, Apr 12, 2018 | Published: 09:41 GMT, Apr 12, 2018 |
0 Comments
1045
This post was written by : Suganthini

பிரான்ஸில் ஏயார்லைன் விமானசேவைப் பணியாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

எனினும், இது தொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் புதிய பொருளாதாரச் சீர்திருத்தத்திட்டத்தை அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடந்த வருடம் முன்வைத்தார். இதற்கு அந்நாட்டிலுள்ள பல்வேறு தொழிற்சங்கங்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், ஏயார் பிரான்ஸ் தொழிற்சங்கத்தின் தலைமையில் ஏயார்லைன்ஸ் விமானசேவைப் பணியாளர்களும் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி நேற்று (புதன்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்தனர்.

இந்த வருடம் முதல் 2 சதவீத சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டுமென ஏயார்லைன் விமானசேவை தெரிவித்துள்ளது. எனினும், ஏயார்லைன் விமானசேவைப் பணியாளர்கள் 6 சதவீத சம்பள அதிகரிப்பை ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில், சம்பள அதிகரிப்புத் தொடர்பாக மேலதிக பேச்சுவார்த்தைகளைத் தொடர முகாமைத்துவம் இணங்கியுள்ளதாகவும், அந்த ஊடகம் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)