Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முல்லைத்தீவில் பரபரப்பு – கத்தியுடன் கொலை அச்சுறுத்தல் விடுத்த மர்ம நபர்

In இலங்கை
Updated: 17:23 GMT, Apr 12, 2018 | Published: 17:23 GMT, Apr 12, 2018 |
0 Comments
1334
This post was written by : Ravivarman

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்கியிருந்த கூடாரத்தினுள் நபர் ஒருவர் கத்தியுடன் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் 400ஆவது நாளாக இன்றைய  போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று இரவு உறவுகள் தங்கியிருந்த கூடாரத்தினுள் கத்தியுடன் நுழைந்த நபர் ஒருவர் உறவுகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து அவர்களை தாக்க முற்பட்டு உள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து தப்பித்து உறவுகள் கூடாரத்தை விட்டு வெளியேறிய வேளை, அந்நபர் அங்கிருந்த கதிரையினை கத்தியால் வெட்டி சேதப்படுத்தினர்.

பின்னர் அங்கிருந்த சமையல் பத்திரங்களையும் சேதப்படுத்தி உறவுகளால் ‘ இன்று 400 ஆவது நாள் ‘ என எழுதி தொங்க விடப்பட்ட பதாகையையும் சேதப்படுத்தி உள்ளார். இந்நிலையில் அவ்விடத்தில் மக்கள் கூடி தாக்குதலை மேற்கொண்ட நபரை பிடிக்க முயன்ற வேளை அவ்விடத்தில் இருந்து தாக்குதலாளி தப்பி ஓட முயன்றுள்ளார்.

இருந்த போதிலும் போராட்டம் நடக்கும் இடத்திற்கு சற்று தொலைவில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த பொலிஸாரின் உதவியுடன் தாக்குதலாளி கைது செய்யப்பட்டார்.

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த நபரை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற பொலிஸார் அவரைத் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)