Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானில் இந்துக்களை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை: சபாநாயகர் உத்தரவு!

In
Updated: 04:27 GMT, Apr 13, 2018 | Published: 04:27 GMT, Apr 13, 2018 |
0 Comments
1102
This post was written by : Ravivarman

பாகிஸ்தானில் இந்துக்களை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற சபாநாயகர் சர்தார் அயஸ் சாதிக் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக்  இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானை இந்துக் கடவுளான சிவபெருமானாக சித்தரிக்கும் படம் ஒன்று வெளியானது. பாகிஸ்தானில் இந்துக் கடவுளாக இம்ரான்கானைச் சித்தரித்து வெளியான படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்தே இந்துக்களின் உணர்வினைப் புண்படுத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

இது தொடர்பான பிரச்சினையை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இந்து எம்.பி.யான ரமேஷ் லால் எழுப்பி பேசினார். ‘இம்ரான்கானை இந்து கடவுளாக சித்தரித்து வெளியான படம், இந்து மக்களின் உணர்வினை புண்படுத்துகிறது. இத்தகைய குற்றங்கள் இணையத்தள பாதுகாப்புச் சட்டத்தின் வரம்புக்குள் வருகிறது. எனவே சம்மந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg