Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியத் தாக்குதலில் இரசாயன ஆயுதங்கள்: பிரான்ஸ் ஜனாதிபதியால் பரபரப்பு!

In ஐரோப்பா
Updated: 09:12 GMT, Apr 13, 2018 | Published: 05:42 GMT, Apr 13, 2018 |
0 Comments
1229
This post was written by : Ravivarman

அண்மையில் சிரிய அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் இரசாயனப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதற்கு தம்மிடம் ஆதாரம் உள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளமை உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டோமா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் இரசாயனப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், சரியான நேரத்தில் சிரியா மீது தாக்குதல் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக மேற்கு நாடுகள் சிரியா மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்த ஆயத்தமாகி வருவதாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளன.

எனினும் இது தொடர்பான தாக்குதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதேவேளை சிரிய அரசாங்கம் இரசாயனப்பொருட்கள் அடங்கிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)