Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக பாகிஸ்தான்: அமெரிக்கா!

In
Updated: 06:25 GMT, Apr 13, 2018 | Published: 06:25 GMT, Apr 13, 2018 |
0 Comments
1111
This post was written by : Ravivarman

தலிபான், ஹக்கானி பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது என அமெரிக்க நாடாளுமன்ற குழுவிடம் இராணுவத் தளபதி ஜெனரல் மார்க் மில்லே தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இராணுவத் தளபதி ஜெனரல் மார்க் மில்லே பாகிஸ்தான் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் எல்லையோர பாகிஸ்தானிய மாகாணங்களில் தலிபான் மற்றும் ஹக்கானி அமைப்புகள் சுதந்திரமாக செயற்பட்டு வருகின்றன. எல்லா வசதிகளும் அவர்களுக்குக் கிடைக்கின்றன எனக் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பைத் தாக்குதலில் மூளையாகச் செயற்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் ஜமாத் உத்தவா என்ற இயக்கத்தை நடத்தி வருகின்றான்.

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களை நடத்தும் தலிபான், ஹக்கானி பயங்கரவாத இயக்கம் உள்ளிட்ட பல இயக்கங்களுக்கு பாகிஸ்தான் புகலிடமாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சில மாதங்களுக்கு முன்னர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதே குற்றச்சாட்டை முன்வைத்து பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியையும் அவர் நிறுத்தி வைத்ததன் காரணமாக, அமெரிக்கா – பாகிஸ்தான் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)