Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏவுகணைத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தியது சவூதி அரேபியா!

In உலகம்
Updated: 07:06 GMT, Apr 13, 2018 | Published: 07:06 GMT, Apr 13, 2018 |
0 Comments
1480
This post was written by : Ravivarman

சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தைக் குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றைச் சவூதி அரேபிய இராணுவம் இன்று (வெள்ளிக்கிழமை) தடுத்து நிறுத்தியுள்ளது.

குறித்த தாக்குதலிற்கு யேமனின் ஹெளதி போராளிகள் பொறுப்பேற்றுக் கொண்டதுடன், சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தையும், ரியாத்தில் உள்ள பாலிஸ்டிக் ஏவுகணைத் தளத்தையும் இலக்கு வைத்தே குறித்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், மற்றுமொரு ஏவுகணை எல்லை நகரான ஜஸானுக்கு அருகில் நடுவானில் சுட்டுவீழ்த்தப்பட்டது.

இதன்போது மூன்று மிகப் பலமான குண்டுவெடிப்புகள் போன்ற ஒலிகள் கேட்டதாக பிரதேச மக்களும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் அல் அராபியா ஊடகங்கத்திடம் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சவுதிப் படையினர் தென் சவுதி அரேபியாவில் உள்ள அபா பிராந்திய விமான நிலையத்திற்கு மேலாக தமது ஆளில்லா விமானங்களைச் செலுத்திக் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)