Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சியளித்த ஸ்லோன் ஸ்டீபன்ஸ்

In டெனிஸ்
Updated: 07:36 GMT, Apr 13, 2018 | Published: 07:36 GMT, Apr 13, 2018 |
0 Comments
1037
This post was written by : Anojkiyan

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் சம்பியனும், மியாமி சம்பியனுமான அமெரிக்காவின், ஸ்லோன் ஸ்டீபன்ஸ் சிறுவர்களுக்கான டென்னிஸ் பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளார்.

கலிபோர்னியாவின் கொம்டொன் பகுதியில் உள்ள பின்தங்கிய பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அவர், டென்னிஸ் சிறுவர்களுக்கு பயிற்சியளித்துள்ளார்.

இது குறித்து ஸ்லோன் ஸ்டீபன்ஸ் குறிப்பிடுகையில், “இந்த டென்னிஸ் விளையாட்டில் பின்தங்கிய மாணவர்களையும் அழைத்துச் செல்லவேண்டும். அதற்காக எல்லோரும் கைக்கோர்க்க வேண்டும், இது எளிதான காரியம் அல்ல. இந்த சந்தர்ப்பத்தினை சிறுபான்மை இனத்தவர்கள் பயிலும் கொம்டன் பாடசாலைகளுக்கு வழங்கினால் அது பயனுள்ளதாக அமையும்.

அவர்களை வாழ்வின் மிக உச்ச நிலைக்கு கொண்டுச் செல்லலாம். அவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் சரியான சந்தர்ப்பம் இது என்று நினைக்கிறேன்” என கூறினார்.

கலிஃபோர்னியாவில் சிறுபான்மையினருக்கு இந்த விளையாட்டிற்கான ஆற்றலை விரிவாக்க ஆபிரிக்க அமெரிக்க வீரர் மேற்கொண்டுள்ள முயற்சியில் ஒரு அங்கமாகவே, இவர் நேற்றைய தினம் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)