Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சி.எஸ்.கே.ஏ அணியை பாராட்டிய ஆர்சனல் அணி முகாமையாளர்!

In உதைப்பந்தாட்டம்
Updated: 09:13 GMT, Apr 13, 2018 | Published: 09:13 GMT, Apr 13, 2018 |
0 Comments
1061
This post was written by : Anojkiyan

ஐரோப்பிய சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் ஆர்சனல் அணிக்கெதிரான போட்டியில், சிறப்பாக விளையாடிய சி.எஸ்.கே.ஏ மொஸ்கோவ் அணியை ஆர்சனல் அணியின் முகாமையாளர் ஆர்சன் வெங்கர் பாராட்டியுள்ளார்.

மொஸ்கோவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற சி.எஸ்.கே.ஏ மொஸ்கோவ் அணி மற்றும் ஆர்சனல் அணிகளுக்கிடையிலான போட்டி 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதன்மூலம் ஆர்சனல் அணி ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்த போட்டியின் பின்னர் நிருபர்களிடம் கருத்து தெரிவித்த ஆர்சனல் அணியின் முகாமையாளர் ஆர்சன் வெங்கர், “முதல் ஆட்டத்திற்கும் இந்த போட்டிக்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கும். இந்த போட்டியில் முதல் பாதியில் சிறப்பாக விளையாடிதுடன், சிறு, சிறு மாற்றங்களுடன் இரண்டாம் பாதி ஆட்டம் அமைந்திருந்தது. எம்மை எதிர்த்து போட்டியிட்ட சி.எஸ்.கே.ஏ மொஸ்கோவ் அணியினரை நான் பாராட்டுகிறேன். அவர்கள் இரண்டு போட்டிகளிலும் மிகச்சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்கள்.

குறிப்பாக இன்றைய போட்டியில் அவர்கள் மிக நன்றாக விளையாடினார்கள். நாம் எதிர்ப்பார்த்ததை விட அவர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வெளியேறும் அவர்களை நான் பாராட்டுகிறேன். நாம் மீண்டும் உங்களை உலகக்கிண்ணத் தொடரில் சந்திக்கிறோம்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)