Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை: பிரித்தானியா விசேட கலந்துரையாடல்!

In
Updated: 10:14 GMT, Apr 13, 2018 | Published: 10:14 GMT, Apr 13, 2018 |
0 Comments
1065
This post was written by : Ravivarman

சிரியாவுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாட பிரதமர் தெரேசா மே விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிரியாவின் கிழக்கு கௌட்டா நகரை கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து மீட்கும் உச்சகட்டப் போரில் அந்த நாட்டின் விமானப்படைகள் ஈடுபட்டு வரும் நிலையில், கிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட டவுமா நகரில் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் இரசாயன தாக்குதலை நடத்தியிருந்தன.

இதனால் குழந்தைகள் உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததுடன், குறித்த  இரசாயனத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை சிரிய அரசு மறுத்துள்ளது.

இந்த நிலையிலேயே சிரியாவுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் பிரித்தானியா அமைச்சரவையை பிரதமர் மே கூட்டி ஆராய்ந்துள்ளார்.

இதன்போது சிரியாவுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இருந்தால் அதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியை கோருவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், அமெரிக்கா சிரிய அரசுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை முன்னடுத்தால் அதற்கு ஒத்துழைப்பு வழங்க மே அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜெரோமி கோபின் விமர்சித்துள்ளதுடன், சிரியாவில் பிரித்தானிய இராணுவத்தினர் குவிக்கப்படுவதை தான் ஒரு போதும் ஏற்கப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் இவ்வாறான முடிவுகளை அமைச்சரவையின் ஊடாக எடுப்பதனை விடுத்து நாடாளுமன்ற அங்கீகாரத்துடன் எடுக்க வேண்டும் எனவும் கோபின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிரிய விமானப்படை நடத்திய இரசாயன தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்தபட வேண்டும் என அமெரிக்கா, பிரான்ஸ், சுவீடன், போலந்து, நெதர்லாந்து, குவைத், பெரு மற்றும் ஐவரி கோஸ்ட் உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)