Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சத்திரச் சிகிச்சையில் வெற்றி – நலமுடன் வீடு திரும்பினார் இளவரசர் பிலிப்

In
Updated: 13:09 GMT, Apr 13, 2018 | Published: 13:06 GMT, Apr 13, 2018 |
0 Comments
1129
This post was written by : Puvanes

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எலிசபெத் மகாராணியின் துணைவரும் எடின்பேர்க் கோமகனுமான பிலிப் இடுப்பு சத்திரச் சிகிச்சையினை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்.

96 வயதான பிலிப் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைப்பாடு காரணமாக லண்டன் கிங் எட்வார்ட் ஏஐஐ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு இடுப்பு பகுதியில் சத்திரச் சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவேண்டும் என மருத்துவமனைத் தரப்பு தெரிவித்ததனைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை அவருக்கு சத்திரச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

வெற்றிகரமான சிகிச்சையின் பின்னர் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிலிப் இன்று (வெள்ளிக்கிழமை) வீடு திரும்பியுள்ளார்.

இதேவேளை, 65 வருடங்களுக்கும் அதிகமாக அரச கடமைகளில் ஈடுபட்டுவந்த பிலிப் அடிக்கடி உடல் நலக் குறைபாடுகள் ஏற்பட்டதனைத் தொடர்ந்து கடந்த ஓகஸ்ட் மாதத்துடன், அரச பணிகளில் இருந்து உத்தியோகப்பூர்வமாக ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)