சிரியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தாக்குதல் நடத்தப்படவில்லை: தெரேசா மே
சிரியாவில் ஆட்சி மாற்றத்தை உண்டாக்கும் நோக்கில் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.
சிரியாவில் தொடர்ந்து நடத்தப்படும் இரசாயன தாக்குதலுக்கு எதிராக, குரல் கொடுக்கும் வகையில், அமெரிக்க ஜனாபதி டொனால்ட் ட்ரம்பிடம் தெரேசா மே கடந்த வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கமைய பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து, பிரித்தானியா தற்போது சிரியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், சிரியா மீதான தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, இராணுவ பலத்தை பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.
இதேவேளை, பிரித்தானியாவின் ‘டொர்னடோ ஜெட் போர் விமானங்கள்’, இரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு அமைந்துள்ள ஹோம்ஸ் நகரின் அருகே தாக்குதல் நடத்துவதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.