Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைச்சர்களின் பதவி துறப்பால் நாடு தூய்மையடைந்துள்ளது! – நளின் பண்டார

In இலங்கை
Updated: 06:15 GMT, Apr 14, 2018 | Published: 06:15 GMT, Apr 14, 2018 |
0 Comments
1209
This post was written by : Yuganthini

அரசாங்கத்தில் புற்று நோயாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 உறுப்பினர்களும் வெளியேறியமை நாட்டுக்கு சிறந்ததென, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இவ்வளவு காலமும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பாதிப்பை விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட இவர்கள் பதவியை துறந்து வெளியேறியமையால் அரசாங்கமும் தூய்மை அடைந்துள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இவர்கள் வெளியேறியமையால் அரசாங்கம் புதிய சக்தியுடன் முன்னேற்றப் பாதையை நோக்கி செல்லக் கூடிய வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளதென நளின் பண்டார சுட்டிக்காட்டினார்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg