Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மைத்திரியின் வீட்டில் குவிந்த நீலப்படை!

In இலங்கை
Updated: 12:04 GMT, Apr 14, 2018 | Published: 12:04 GMT, Apr 14, 2018 |
0 Comments
1567
This post was written by : Puvanes

புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக இடம்பெற்றுவரும் வேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோக பூர்வ இல்லத்தில் இன்று கலாசார, பாரம்பரிய அம்சங்களோடு வருடப்பிறப்பை கொண்டாடியுள்ளார்.

குடும்பத்தாருடன் இணைந்து புத்தாண்டை சிறப்பான வரவேற்ற மைத்திரி, பாரம்பரிய முறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதோடு, நீலப் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.

மைத்திரியின் மனைவி ஜயந்தி சிறிசேன மற்றும், மகள் சத்துரிக்கா சிறிசேன உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒருசேர ஒரே வண்ணத்தில் ஆடைகளை அணிந்து புதுவடக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை கண்கொள்ளாக் காட்சிகளாக அமைந்துள்ளன.

புத்தாண்டை முன்னிட்டு சுப வேளையில் பணிகளைத் தொடங்கும் சம்பிரதாயத்திற்கு அமைய ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்ல வளாகத்தில் வில்வமரக்கன்று ஒன்றை நட்டதன் பின்னர், கைவிசேட சம்பிரதாய நிகழ்விலும் ஜனாதிபதி ஈடுபட்டார்.

மேலும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், நாட்டிய நாடகங்களும் இதன்போது இடம்பெற்றதுடன் பலதரப்பு கலைஞர்கள் உட்பட அமைச்சர்களும் பொதுமக்களும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

இல்லத்தை நோக்கி படையெடுத்து வந்திருந்த விருந்தினர்களை பாரம்பரியத்தோடு வரவேற்ற மைத்திரி அவர்களுக்கு விருந்துபசாரங்களை வழங்கி வைத்துள்ளார்.

நிகழ்வுகளின் போது நாட்டு மக்களுக்கு புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜனாதிபதி “புத்தாண்டில் நேர்மறையான எண்ணங்கள் மற்றும் சிறந்த சிந்தனைகளுடன் அனைத்து வகையான பேதங்களையும் மறந்து ஒரே நாட்டு மக்களாக தாய்நாட்டை கட்டியெழுப்புவதற்கு நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் அனைவரும் அணிசேரவேண்டும்” என தன் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் வெகு விமர்சையாக இன்று தனது இல்லத்தில் புதுவருட கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

   

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)