Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாரத் சுகாதார மையம்: சத்தீஸ்கரில் பிரதமர் திறந்து வைத்தார்!

In இந்தியா
Updated: 15:06 GMT, Apr 14, 2018 | Published: 15:06 GMT, Apr 14, 2018 |
0 Comments
1110
This post was written by : Ravivarman

ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தின் கீழ் நாட்டின் முதல் சுகாதார மையத்தை சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) திறந்து வைத்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று காலை பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜங்கலா பகுதியை வந்தடைந்தார்.

‘ஆயுஷ்மன் பாரத் யோஜானா’ திட்டத்தின் மூலம் பல்வேறு நோய்களுக்கான உயர்சிகிச்சை அளிக்க வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஒன்றரை லட்சம் சுகாதார மையங்களை அமைக்கும் மத்திய அரசின் நோக்கத்தின்படி, ஜங்லாவில் முதல் சுகாதார மையத்தை பிரதமர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, சத்தீஸ்கர் மாநில முதல் மந்திரி ரமன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)