Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஷ்மீரில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறித் தாக்குதல்!

In இந்தியா
Updated: 18:56 GMT, Apr 14, 2018 | Published: 17:00 GMT, Apr 14, 2018 |
0 Comments
1272
This post was written by : Ravivarman

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் இராணுவம் இன்று (சனிக்கிழமை) தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டர் எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று காலை 8.30 மணியில் இருந்து பாகிஸ்தான் படையினர் அத்துமீறிய வகையில் துப்பாக்கி மற்றும் மோட்டர் குண்டுகளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், இருதரப்பினருக்கும் இடையில் சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதேவேளை, இந்த ஆண்டில் ஜனவரி மாதம் தொடங்கி காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் நடத்தியுள்ள சுமார் 650 தாக்குதல்களில் 15 ராணுவ வீரர்கள் உள்பட 29 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)