Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூட்டமைப்பின் பின்னடைவுக்கு வேற்றுமையே காரணம்: சார்ள்ஸ் சாடல்

In இலங்கை
Updated: 10:18 GMT, Apr 15, 2018 | Published: 05:06 GMT, Apr 15, 2018 |
0 Comments
1175
This post was written by : poovannan

மன்னார் மாவட்டத்தில், கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. அம்மாவட்டத்தில் மூன்று சபைகளை இழந்தமை கவலைக்குரிய விடையம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், “மன்னார் பிரதேச சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய இரண்டு சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது. குறித்த சபைகளின் இழப்புக்கு காரணம் கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையே உள்ள வேற்றுமை உணர்வுமாகும்.

வட்டார முறைத் தேர்தல் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்று புதிய கட்சிகளை உருவாக்கப்பட்டமை ஆகிய காரணங்களால் எமக்கான வாக்குகள் பிரிக்கப்பட்டும் உறுப்பினர்கள் சிதறடிக்கப்பட்டும் போனமையே தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.

விடுதலைப் புலிகள் போராளிக் கட்சிகள் என்று தங்களை அடையாளப்படுத்தியவர்கள் கடைசி நேரத்தில் ஆளும் கட்சிப் பக்கம் சார்ந்து நின்றமை கவலைக்குரிய விடயமாகும்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)