ஹங்கேரியில் பொதுத்தேர்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேரணி
அண்மையில் ஹங்கேரியில் நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் முறைகேடு காணப்படுவதாகக் கூறி, அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.
தலைநகர் புடாபெஸ்ட்டில் (Budapest) நேற்று (சனிக்கிழமை) ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள், நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றதுடன், இந்தத் தேர்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு கோஷங்களையும் எழுப்பியுள்ளனர். இதன்போது, பிரதமர் ஆர்பனை சர்வதிகாரியெனவும், பொதுமக்கள் விமர்சித்துள்ளனர்.
ஹங்கேரியில் நடத்தப்பட்ட நியாயமற்ற தேர்தலினாலேயே, பிரதமர் விக்டர் ஆர்பன் மீண்டும் பெற்றி வெற்றி பெற்றுள்ளதாகவும், ஆகையால் வாக்குகளை மீள எண்ண நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ஆர்ப்பாட்டக்கக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், தேர்தல் சட்ட விதிமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிக்கவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஹங்கேரியில் இம்மாதம் 8ஆம் திகதி நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில், பிரதமர் விக்டர் ஆர்பன் மூன்றாவது தடவையாகவும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.