Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரிய மோதலுக்குத் தீர்வு காண ஜேர்மன் ஒத்துழைப்பு!

In ஐரோப்பா
Updated: 06:49 GMT, Apr 15, 2018 | Published: 06:49 GMT, Apr 15, 2018 |
0 Comments
1150
This post was written by : Suganthini

சிரியாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சர்வதேச சமூகம் எடுக்கும் முயற்சிக்கு ஜேர்மனி ஒத்துழைக்குமென, ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் ஹெய்க்கோ மாஸ் (Heiko Maas) தெரிவித்துள்ளார்.

பேர்லினில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சிரியாவின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர், ‘சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், சர்வதேச சமூகம் முன்னெடுக்கும் புதிய முயற்சிக்கு பிரான்ஸுடன் இணைந்து ஜேர்மனியும் ஒத்துழைக்கும்’ என்றார்.

மேலும், சிரியாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளுக்கு ஐ.நா. சபை தலைமை தாங்க வேண்டுமெனவும், அவர் வலியுறுத்தியுள்ளார்.

‘ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது மோதலின் ஒருபகுதி மாத்திரமே என்பதை நாம் அனைவரும் அறிவோமென்பதுடன், நிலைமையைப் பெரிதுபடுத்துவதில் எவருக்கும் ஆர்வமும் இல்லை. ஆகையால், சிரியாவில் அரசியல் தீர்வின் மூலம் மாத்திரமே சமாதானத்தை எட்ட முடியும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg