Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியா மீதான தாக்குதல்: பிரித்தானியாவுக்கு சட்ட அடிப்படை இல்லை –ஜெரமி

In
Updated: 07:44 GMT, Apr 15, 2018 | Published: 07:44 GMT, Apr 15, 2018 |
0 Comments
1058
This post was written by : Suganthini

சிரியா மீது பிரித்தானியா முன்னெடுத்துள்ள எதிர்ப்பு நடவடிக்கைக்கு எந்தவித சட்ட அடிப்படையும் இல்லையென, பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பியன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘சிரியா மீதான பிரித்தானியாவின் எதிர்ப்பு நடவடிக்கைக்கு எந்தவித சட்ட அடிப்படையும் இல்லையென்பதுடன், பிரித்தானியாவின் இந்த நடவடிக்கையானது, இதே வழியில் ஏனையோரும் நடக்க ஊக்குவிக்கின்றது’ என்றார்.

‘சிரியாவின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கவனத்திற்கொள்ளப்பட வேண்டுமென்பதே எனது வாதம். ஆனால், அதற்கிடையில் பிரித்தானியாவின் ஆதரவுடன் சிரியாவில் தாக்குதல் நடத்தப்பட்டது’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)