Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கர்ப்பிணியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிய கும்பல்

In இந்தியா
Updated: 11:05 GMT, Apr 15, 2018 | Published: 11:00 GMT, Apr 15, 2018 |
0 Comments
1396
This post was written by : Kemasiya

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கர்ப்பிணி பெண்ணொருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ நகரின் புறநகர் பகுதியான மோகன்லால் கஞ்ச் என்ற இடத்தை சேர்ந்த, 35 வயதுடைய கர்ப்பிணியே இவ்வாறு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்றுகொண்டிருந்த போது, இடைவழியில் வைத்து நான்கு பேர் கொண்ட குழுவினரால் கடத்தப்பட்டுள்ளார்.

பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தபட்டுள்ளார். இதன்போது பெண் மயக்க நிலைக்கு சென்றதும் நான்குபேரும் தப்பி ஓடியுள்ளனர்.

இதேவேளை அவ்வழியில் சென்ற ஊர்மக்கள் மயக்கத்தில் கிடந்த பெண்ணை கண்டு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார், பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதோடு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மயக்கம் தெளிந்த பெண், நான்கு பேர் தன்னை கடத்தியதாக  வாக்குமூலமளித்ததை தொடர்ந்து, பொலிஸார் குறித்த கும்பலை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg