Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரியங்கா சோப்ராவிற்கு ஏற்பட்ட அவமானம்: ஏஞ்சலினா ஜூலிக்கு முதலிடம்!

In சினிமா
Updated: 08:50 GMT, Apr 15, 2018 | Published: 08:50 GMT, Apr 15, 2018 |
0 Comments
1174
This post was written by : Ravivarman

பிரபல நிறுவனம் வெளியிட்டுள்ள மக்களை கவர்ந்த 20 பிரபலங்களின் பட்டியலில் ஏஞ்சலினா ஜூலி முதலிடத்திலும், இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா இருபதுக்குள்ளும் இடம் பிடித்துள்ளனர்.

சர்வதேச அளவில் மக்களைக் கவர்ந்த பிரபலங்கள் பட்டியல் குறித்து ‘யூகோவ்’ என்ற நிறுவனம் இணையத்தளத்தில்; 35 நாடுகளில் 37 ஆயிரம் பேரிடம் வாக்கெடுப்பு நடத்தியது.

இதன்மூலம் மக்களைக் கவர்ந்த 20 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் பட்டியலிடப்பட்டு அறிவிக்கப்பட்டனர். அவர்களில் ஆண்கள் பிரிவில் மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்தார்.

அவரைத் தொடர்ந்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா 2-வது இடத்திலும், நடிகர் ஜாக்கிஜான், சீன அதிபர் சி ஜின்பிங் ஆகியோர் முறையே 3-வது மற்றும் 4-வது இடத்திலும் உள்ளனர்.

இதேபோல் பெண்கள் பிரிவில் ஹொலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி முதலிடம் பிடித்து இருக்கிறார். அவருக்கு அடுத்தப்படியாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா, மற்றும் ஒப்ரா, வின்பிரே ஆகியோர் முறையே 2-வது மற்றும் 3-வது இடம் பெற்றுள்ளனர்.

ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா 12-வது இடத்தை பிடித்துள்ளதுடன், இவர் தற்போது ஹொலிவுட் படங்களிலும், அமெரிக்க டி.வி. தொடரிலும் நடித்து பிரபலம் ஆகியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)