Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யதார்த்த வாழ்க்கையை படமாக்கினேன் – தேசிய விருது கிடைத்தது: இயக்குனர் செழியன்

In சினிமா
Updated: 09:33 GMT, Apr 15, 2018 | Published: 09:33 GMT, Apr 15, 2018 |
0 Comments
1108
This post was written by : Ravivarman

வாடகை வீடுதேடி அலையும் யதார்த்த வாழ்க்கையைப் படமாக்கியிருப்பதாலேயே தேசிய விருது கிடைத்துள்ளதாக ‘ரூலெட்’ படத்தை இயக்கிய செழியன் தெரிவித்துள்ளார்.

65-வது தேசிய விருது பட்டியல் நேற்று (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டதில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை ‘ரூலெட்’ என்ற படம் பெற்றுள்ளது. இன்னும் திரைக்கு வராத இந்த படம் 30 சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ளதுடன் பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் ‘ரூலெட்’ படத்தின் கதை என்ன என்பது குறித்து இயக்குனர் செழியன் கருத்துத் தெரிவிக்கையில், ‘எமது ஊரில் வாடகை வீடு தேடி அலைவது பெரிய விஷயம். இதில் உள்ள சிக்கல்கள், சிரமங்கள் என்ன என்பதை யதார்த்தமாக சொல்வதே ‘ரூலெட்’ படத்தின் கதை.

எமது குடும்பத்தில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. இதை மற்ற நாட்டினரும் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளதை உள்ளபடியே திரைப்படமாக்கி இருக்கிறேன்.வெளிநாட்டு படங்களை நாம் ஆச்சர்யமாக பார்க்கிறோம். நமது நாட்டில் நடக்கும் விஷயங்களை அவர்கள் அதிசயமாக பார்க்கிறார்கள் என்பதற்கு ‘ரூலெட்’ படம் உதாரணம்.

இது 30 நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் பாராட்டைப் பெற்றது. 17 விருதுகளையும் பெற்றிருக்கிறது. நமது கலாசாரத்தை அனைவரும் அறியச் செய்யும் வகையில் இந்த படத்தின் கதை அமைந்திருப்பது அனைவரையும் கவர்ந்திருக்கிறது. நான் கல்லூரி, பரதேசி, தாரைதப்பட்டை, ஜோக்கர் உள்பட 10 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறேன்.

இந்த படத்தை முதல் முறையாக இயக்கி இருக்கிறேன். நமது வாழ்க்கை முறையை வெளிநாட்டவரும் அறிய வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற படங்களை எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை.

அதனால்தான் வெளிநாட்டு பட விழாக்களில் இந்த படத்தைப் பங்குபெற செய்தேன். விரைவில் தமிழகத்தில் ‘ரூலெட்’ திரைக்கு வரும்’ என இயக்கிய செழியன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)