பிச்சைக்காரர்களுக்கு வாக்களிப்பு அட்டை

கர்நாடகவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளமையால் 508 பிச்சைக்காரர்களுக்கு வாக்களிப்பு அட்டை வழங்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த வாக்காளர் அட்டைகளை 364 ஆண்கள் மற்றும் 144 பெண்களுக்கு வழங்கியுள்ளதாக, தேர்தல் அதிகாரி மஞ்சுநாத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவர்கள் ராஜேஷ்வரி நகரிலுள்ள பிச்சைக்காரர்கள் அரச மறுவாழ்வு மையத்தில் வசித்து வருவதாகவும், நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் வாக்களிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க. மற்றும் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதாதளம் ஆகியன கடும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.