Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவுடன் கூட்டுறவை வலுப்படுத்த விரும்பும் ஜப்பான்

In உலகம்
Updated: 10:44 GMT, Apr 15, 2018 | Published: 10:44 GMT, Apr 15, 2018 |
0 Comments
1139
This post was written by : Suganthini

சீனாவுடன் மீண்டும் இருதரப்புக் கூட்டுறவைக் கட்டியெழுப்ப விரும்புவதாக, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ரரோ கோனோ (Taro Kono ) தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி, ஜப்பான் வெளிவிவகார அமைச்சரை டோக்கியோவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போதே, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடையில் சமாதானம் மற்றும் நட்புறவு உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இந்நிலையில், இரு நாடுகளுக்குமிடையில் இருதரப்புக் கூட்டுறவை இந்த வருடம் முதல் மீண்டும் கட்டியெழுப்ப ஜப்பான் விரும்புகின்றது’ என்றார்.

அத்துடன், வடகொரியாவின் அணுவாயுதத்திட்டத்துக்கு எதிராக சீனாவும் ஜப்பானும் நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டுமெனவும், அவர் கூறியுள்ளார்.

வடகொரியாவின் அணுவாயுதம் மற்றும் ஏவுகணைச் சோதனைகள் மீதான பலத்த கண்டனங்களுக்கு மத்தியில் இரு கொரியாக்களுக்கிடையிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுக்குமிடையிலும் சந்திப்புகள் நடைபெறவுள்ளன. இந்தச் சந்திப்புகளுக்கு முன்னராக, ஜப்பானுக்கு சீனா வெளிவிவகார அமைச்சர் விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், வடகொரிய மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை, வடகொரியாவின் அணுவாயுதத்திட்டத்தைக் கைவிடுவதை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)