Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பா.ஜ.க.வினருக்கு வித்தியாசமான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்திய பொதுமக்கள்

In இந்தியா
Updated: 11:34 GMT, Apr 15, 2018 | Published: 11:28 GMT, Apr 15, 2018 |
0 Comments
1169
This post was written by : Yuganthini

பாலியல் வன்முறை சம்பவங்களால் இரு குழந்தைகள் கொல்லப்பட்டமை தொடர்பில் கேரளாவின் செங்கன்னூர் தொகுதி மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு அட்டைகளை கதவில் தொங்கவிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

அப்பகுதியிலுள்ள அனைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களில் ‘இந்த வீட்டில் 10 வயதுக்குட்பட்ட சிறுமி இருக்கின்றாள். வாக்கு கேட்க பாஜகவினர் உள்ளே வர வேண்டாம். நுழைவாயிலுக்குள் வெளியே நில்லுங்கள்’ என்ற வாசகத்தையே அனைத்து அறிவிப்பு அட்டைகளிலும் காணக்கூடியதாக இருந்தன.

அத்துடன் சிறுமியின் படுகொலை தொடர்பில் உலகமே பேசுகின்றது. ஆனால் பா.ஜ.க எந்த அறிக்கையும் வெளியிடாதமையானது மனதை வேதனைப்படுத்துவதுடன் இவர்களுடன் இருப்பதையிட்டு வெட்கம் அடைவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கேரள மாநிலம், செங்கன்னூரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg