Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துப்பாக்கிச் சூட்டுக்கு கனடா பிரதமரே காரணம் – கொலையாளி வாக்குமூலம்!

In கனடா
Updated: 12:26 GMT, Apr 15, 2018 | Published: 12:26 GMT, Apr 15, 2018 |
0 Comments
1043
This post was written by : Litharsan

கனடாவின் கியுபெக் நகரின் பள்ளிவாசலிலுள்ள இஸ்லாமிய கலாசார நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியமைக்கு கனடா பிரதமர் ஜஸ்ரின் ரூவேடாவின் அகதிகள் கொள்கையே காரணமென தாக்குதல்தாரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதி குறித்த கலாசார மையத்தில் புகுந்து அலெக்ஸாண்ட் பிசோனெட் (28 வயது) என்பவர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தார்.

அதில் 6 பேர் கொல்லப்பட்டும், 5 பேர் படுகாயங்களுக்கும் உள்ளாகினர். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட குறித்த தாக்குதல்தாரியிடம் கனடா பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் அவர் அளித்த வாக்குமூலத்திலேயே குறித்த தாக்குதலுக்கு கனடா பிரதமர் தான் காரணமென அவர் தெரிவித்தார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிடுகையில், கனடா பிரதமர் தொலைக்காட்சி பேட்டியொன்றில் எந்த மத நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும் கனடா அவர்களை வரவேற்கும் என்று தெரிவித்திருந்தார். அந்தப் பேட்டியைக் கண்டதும் இஸ்லாமியத் தீவிரவாதிகளும் கனடாவுக்குள் வந்துவிடுவார்கள் என்றும், அவர்கள் தன்னையும் தன் குடும்பத்தாரையும் கொன்றுவிடுவார்கள் என்றும் அச்சப்பட்டே தான் இந்த முடிவை எடுத்ததாக அந்த துப்பாக்கிதாரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ, நீங்கள் எந்த மத நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. உங்களை கனடா நாட்டவர்கள் வரவேற்பார்கள்” என்ற செய்தியை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார்.

அந்த செய்தியை 768,000 டுவிட்டர் பயனாளர்கள் 418000 பேர் மறு டுவீட் செய்திருந்தார்கள். இதனை பல பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)