Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவில் முதல் தடவையாக மின்சார இணைப்பைப் பெற்ற கிராமம்!

In இந்தியா
Updated: 13:43 GMT, Apr 15, 2018 | Published: 14:18 GMT, Apr 15, 2018 |
0 Comments
1182
This post was written by : Ravivarman

இந்தியாவின் மேற்கு அமராவதி நகரத்தின் தொலைதூரப் பழங்குடி கிராமம் ஒன்று சுதந்திரத்திற்குப் பின்னர் முதல் தடவையாக மின்சார இணைப்பைப் பெற்றது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ‘சௌபாக்கியா’ திட்டத்தின் கீழ், புல்லுவாவன் என்னும் கிராமத்தில் வசிக்கும் 100 குடும்பங்களுக்கே நேற்று (சனிக்கிழமை) இவ்வாறு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கிராமத்திற்கு பேரூந்து வசதிகள் மற்றும் ஏனைய பிற அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாகவும்  உறுதியளித்துள்ளது.

இது தொடர்பாக குறித்த கிராமவாசியான பூனா என்பவர் கருத்துத் தெரிவிக்கையில், ‘நாம் முதன் முதலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளோம். எமது கிராம மக்கள் சிலருக்கு மின்சாரம் என்றால் என்ன என்பதை தற்போதே அறிந்து கொண்டுள்ளார்கள்.

இந்த மின்சார இணைப்பின் மூலம் எமது பிள்ளைகளின் கல்விநிலை மேலும் முன்னேற்றமடையும் என்பதுடன் நாம் பாதுகாப்புடன் வாழலாம். இத்திட்டத்தினைக் கொண்டு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்’ என குறித்த கிராமவாசி மேலும் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் 2018 ஆம் ஆண்டின் இறுதியில் நாட்டின் அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் கிடைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்ததுடன், இதற்கென 2.5 பில்லியன் டொலர் பணத்தினையும் ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)