Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கலாஓயா பெருக்கெடுப்பு: கொழும்பு – மன்னார் போக்குவரத்து பாதிப்பு!

In இலங்கை
Updated: 15:33 GMT, Apr 15, 2018 | Published: 16:23 GMT, Apr 15, 2018 |
0 Comments
1125
This post was written by : Ravivarman

கலாஓயா பெருக்கெடுத்ததால் புத்தளம் பழைய எலுவங்குளம் பாதையின் போக்குவரத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இப்பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையின் காரணமாக கலாஓயாவின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், எலுவாங்குளம் குரோஸ்வே பிரதேச பாதையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சப்பாத்து பாலம் இரண்டு அடி உயரத்துக்கு நீரில் மூழ்கியுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – மன்னார், புத்தளம் – மன்னார், கல்பிட்டி – மன்னார் ஆகிய இடங்களுக்குப் பயணிக்கும் வாகனங்கள் இந்த வழியில் பயணிக்கின்றன.

இந்தப் பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதனால், புத்தளம் – அனுராதபுரம் பாதை மற்றும் புத்தளம் – நொச்சியாகம ஓயாமடுவ தந்திரிமலை ஊடாக மன்னார் செல்லும் பாதை என்பன மாற்றுப் பாதைகளாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)