Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வன்கொடுமைச் சம்பவங்களைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம்!

In இந்தியா
Updated: 16:10 GMT, Apr 15, 2018 | Published: 16:10 GMT, Apr 15, 2018 |
0 Comments
1172
This post was written by : Ravivarman

காஷ்மீர் மாநிலம் கத்துவா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் வன்கொடுமைச் சம்பவங்களை கண்டித்து பொதுமக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை கண்டித்து டெல்லி, மும்பை மற்றும் பெங்களூர் நகரங்களில் பொதுமக்கள் பலர் குடும்பத்துடன் ஒன்று திரண்டு பதாகைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டங்களில் பல சிறுமிகளும் கலந்து கொண்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிபா கொடூரமாக வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை இதில் தொடர்புடைய 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் நகரத்தில் 17 வயது இளம்பெண் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பாலியல் புகார் கூறி முதலமைச்சர் அலுவகத்தில் தீக்குளிக்க முயன்றார்.

இதனை அடுத்து, அந்த பெண்ணின் தந்தை பொலிஸ் விசாரணையின்போது கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் மரணமடைந்தார். நாடு முழுவதும் கடும் அதிர்வை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ.வை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg