Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஷ்மீர் சம்பவ குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குங்கள்! – எச்.ராஜா

In இந்தியா
Updated: 04:33 GMT, Apr 16, 2018 | Published: 03:14 GMT, Apr 16, 2018 |
0 Comments
1175
This post was written by : Kemasiya

காஷ்மீர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலைசெய்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டுமென பா.ஜ.க.வின் தேசிய செயலர் எச்.ராஜா  வலியுறுத்தியுள்ளார்.

திருவாவூர் மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ராஜாவிடம், காஷ்மீர் சிறுமி கொலை வழக்கு தொடர்பில் வினவிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்தோடு, சிறுமி கொலையானது மன்னிக்க முடியாத குற்றமென்றும், இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடைபெறாத வகையில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீரில் எட்டு வயது சிறுமியொருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். குறித்த சிறுமி கடத்திச் செல்லப்பட்டு, ஆலயமொன்றிற்குள் 10 நாட்கள் மயக்க நிலையில் வைக்கப்பட்டே துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கதவே இல்லாத ஆலயத்தில் ஒரு சிறுமியை எவ்வாறு 10 நாட்கள் அடைத்து வைக்க முடியுமென்றும் எச்.ராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg