Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சஞ்சு சம்சனின் அதிரடியால் ராஜஸ்தான் அணி வெற்றி!

In கிாிக்கட்
Updated: 04:20 GMT, Apr 16, 2018 | Published: 03:48 GMT, Apr 16, 2018 |
0 Comments
1092
This post was written by : Anojkiyan

ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கெதிரான போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரில் நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக சஞ்சு சம்சன் ஆட்டமிழக்காது 92 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் சஹால், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 218 என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பெங்களூர் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக கோஹ்லி 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் கோபால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, ஆட்டமிழக்காது 92 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட சஞ்சு சம்சன் தெரிவுசெய்யப்பட்டார்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)