Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரச்சினைகளுக்கு தீர்வு தீக்குளிப்பல்ல: வைகோ

In இந்தியா
Updated: 06:12 GMT, Apr 16, 2018 | Published: 04:36 GMT, Apr 16, 2018 |
0 Comments
1062
This post was written by : Kemasiya

தமிழக பிரச்சினைகளுக்காக இளைஞர்கள் யாரும் தீக்குளிக்க வேண்டாம் என, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் அறிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அண்மையில் தீக்குளித்த தி.மு.க. தொண்டரை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த வைகோ மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கூறிய அவர்,

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வை புரிந்துகொண்டு மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்.

அத்துடன் தமிழகத்தின் தற்போதைய பிரச்சினைகளுக்காக இளைஞர்கள் தீக்குளிக்க வேண்டாம்” என்றும் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க தொண்டர் ரமேஸ் என்பவர் அண்மையில் தீக்குளித்து தற்கொலைச் செய்து கொள்ள முயற்சித்தார்.

கடும் தீக்காயாங்களுக்கு உள்ளான அவர், கீழ்ப்பாக்கம் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இந்நிலையில் பிரச்சினைகளுக்கு தீர்வு தீக்குளிப்பல்ல என்றும், இளைஞர்கள் தீக்குளிக்கும் எண்ணத்தை கைவிட வேண்டுமென்றும் ஏற்கனவே கோரிக்கையை முன்வைத்திருந்த வைகோ, மீண்டுமொருமுறை மேற்படி வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)