Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: இருவர் உயிரிழப்பு

In
Updated: 04:46 GMT, Apr 16, 2018 | Published: 04:46 GMT, Apr 16, 2018 |
0 Comments
1150
This post was written by : Suganthini

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், எண்மர் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி நகரிலுள்ள தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனையை முடித்துக்கொண்டு வீடு திரும்பியவர்கள் மீது, மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இரு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். இதன்போது இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், எண்மர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவத்துக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், வீதியைத் தடைப்படுத்தி கார் மற்றும் சைக்கிளின் டயர்களை போட்டு எரித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg