Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐந்து புதுமுக வீரர்களுடன் இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளை எதிர்கொள்ளும் பாகிஸ்தான்!

In கிாிக்கட்
Updated: 06:31 GMT, Apr 16, 2018 | Published: 05:31 GMT, Apr 16, 2018 |
0 Comments
1033
This post was written by : Anojkiyan

இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளை எதிர்கொள்ளும் 16 பேர் கொண்ட பாகிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில், முன்னணி வேகப்பந்து வீச்சாளரான வஹாப் ரியாஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுவரை ரி-ருவென்ரி, ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள பகர் சமான், முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்குள் அடியெடுத்து வைக்கிறார். மேலும் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யாசிர் ஷா உபாதைக் காரணமாக இத்தொடரில் இடம்பெறவில்லை.

அதேவேளை பகர் சமான், இமாம் உல் ஹக், சலாகுதின், சாத் அலி, பஹீம் அஷ்ரப் ஆகிய ஐந்து புது முக வீரர்கள் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி விபரம்:

சப்ராஸ் அஹமட் (அணித்தலைவர்), அசார் அலி, இமாம் உல் ஹக், சமி அஸ்லாம், ஹாரிஸ் சோஹைல், பாபர் ஆசம், பகர் சமான், சாத் அலி, ஆசாத் ஷபிக், உஸ்மான் சலாகுதின், ஷதாப் கான், மொஹமட் அமிர், மொஹமட் அப்பாஸ். ஹசன் அலி, ரஹத் அலி, பஹீம் அஷ்ரப்.

எதிர்வரும் மே மாதம், அயர்லாந்து அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டியிலும், இங்கிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)