In
Updated: 05:11 GMT, Apr 16, 2018 | Published: 05:11 GMT, Apr 16, 2018 |
0 Comments
1051
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜோர்ஜ் எச்.டபிள்யூ.புஷ்ஷின் மனைவியும் முன்னாள் முதற்பெண்மணியுமான பார்பரா புஷ் (Barbara Bush) சுகயீனமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புஷ்ஷின் மனைவியான 92 வயதான பார்பரா, எந்த வகையான நோய்க்கு உள்ளாகியுள்ளாரென தெரிவிக்கப்படவில்லை. எனினும், இவர் சுகயீனமடைந்த நிலையில் அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புஷ்ஷின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில், அமெரிக்காவின் 41ஆவது ஜனாதிபதியாக ஜோர்ஜ்.எச்.டபிள்யூ புஷ் பதவி வகித்திருந்தார்.
இதனையடுத்து, இவர்களின் மகனான ஜோர்ஜ்.டபிள்யூ.புஷ், 2001ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில், அமெரிக்காவின் 43ஆவது ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தார்.