Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தந்தையால் தாக்கப்பட்ட மகன் படுகாயம்

In இலங்கை
Updated: 06:31 GMT, Apr 16, 2018 | Published: 05:28 GMT, Apr 16, 2018 |
0 Comments
1090
This post was written by : Varatharajan Yuganthini

முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியில் தந்தையொருவர் மகனை தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இசைப்பிரியன் என்ற 12 வயது சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த சிறுவன் கடந்த சில நாட்களாக வீட்டிற்கு வராமல் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டுக்கு திரும்பிய சிறுவனை அவரது தந்தை கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த சிறுவனை, அவரது தாய் உடனடியாக மாங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து  மேலதிக சிகிச்சைக்காக சிறுவன் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலில் சிறுவனின் இரு கால்களும் முறிந்துள்ளதுடன் கை, முகம், முதுகு பகுதிகளிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் சிறுவனின் தந்தையை கைது செய்து மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)