Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காவிரி விவகாரம்: அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கவுள்ளார் ஸ்டாலின்

In இந்தியா
Updated: 07:01 GMT, Apr 16, 2018 | Published: 05:49 GMT, Apr 16, 2018 |
0 Comments
1113
This post was written by : Kemasiya

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விடயத்தில், அடுத்த கட்ட நகர்வு குறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கவுள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில், காவிரி மீட்பு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும் என, தி.மு.க. வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இக்கூட்டத்தில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கடந்த ஐந்தாம் திகதி தி.மு.க சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

அத்துடன் டெல்ட்டா மாவட்டங்களை மையப்படுத்தி காவிரி உரிமைப்போராட்ட நடைபயணத்தையும், ஸ்டாலின் திருச்சியில் ஆரம்பித்தார்.

அத்துடன், 12ஆம் திகதி சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சார்பில் கருப்பு கொடி போராட்டமும் நடத்தப்பட்டது.

பின்னர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, நடவடிக்கை எடுக்கும்படி ஸ்டாலின் மனுவொன்றையும் கையளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று கூடும் மற்றுமொரு கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg