In
Updated: 06:09 GMT, Apr 16, 2018 | Published: 06:09 GMT, Apr 16, 2018 |
0 Comments
1081
சிறையிலுள்ள கற்றலோனிய சுதந்திர சார்புத் தலைவர்களின் விடுதலையை வலியுறுத்தி பார்சிலோனாவில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது.
பார்சிலோனாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கானோர், சிறையிலுள்ள கற்றலோனிய சுதந்திர சார்புத் தலைவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
அத்துடன், கற்றலோனிய சுதந்திர சார்பு அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்துவைத்துள்ளதன் மூலம், ஸ்பெய்ன் அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியை மீறுவதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஸ்பெய்ன் அரசாங்கம், கற்றலோனியாவில் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து வாக்கெடுப்பு நடத்த அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டபோதும், அதையும் மீறி வாக்கெடுப்பை நடத்தி, நாட்டின் அரசியலமைப்பை இவர்கள் சீர்குலைத்துள்ளதாகவும், ஆகையால், இவர்கள் அரசியல் கைதிகள் இல்லையெனவும், கூறியுள்ளது.
மேலும், இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் ஆர்ட்ரூர் மாஸ் (Artur Mas), கற்றலோனிய நாடாளுமன்ற சபாநாயகர் ரோஜர் டொரண்ட் (Roger Torrent) உட்பட பலர் கலந்துகொண்டனர்.