Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாதுகாக்கக் கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

In இந்தியா
Updated: 07:29 GMT, Apr 16, 2018 | Published: 06:56 GMT, Apr 16, 2018 |
0 Comments
1108
This post was written by : Kemasiya

வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்று வரும் இப்போராட்டத்தில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிராக அண்மையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மீளப்பெறப்பட வேண்டும், அதற்காக மத்திய அரசு மேன்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதில் மு.க.ஸ்டாலின் மற்றும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஸ்ணன், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

வன்கொடுமை தடுப்பு சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும், அதற்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேன்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg