Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சென்னை இரசிகர்கள் ஏமாற்றம்: நாடு திரும்பினார் தென்னாபிரிக்க வீரர்

In கிாிக்கட்
Updated: 07:03 GMT, Apr 16, 2018 | Published: 07:03 GMT, Apr 16, 2018 |
0 Comments
1585
This post was written by : Anojkiyan

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி, நாடு திரும்பியுள்ளார்.

லுங்கி இங்கிடியின் தந்தை காலமானதன் காரணமாகவே அவர், அவசரமாக நேற்று முன் தினம் நாடு திரும்பியுள்ளார்.

மூன்று டெஸ்ட் போட்டிகள், நான்கு ஒருநாள் போட்டிகள், மூன்று ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ள லுங்கி இங்கிடி, இம்முறையே முதல் முறையாக ஐ.பி.எல். கிரிக்கெட் அறிமுகமாகியிருந்தார்.

ஆனால் அவர் துரதிஷ்டவசமாக ஒரு போட்டியில் கூட விளையாடாமல் நாடு திரும்பியிருப்பது, இரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.

இந்திய மதிப்பில் 50 இலட்சம் ரூபாய்க்கு லுங்கி இங்கிடியை சென்னை கிரிக்கெட் நிர்வாகம், ஏலத்தில் வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)