Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்நாட்டில் பயங்கரவாத இயக்கம் செயற்படுகிறது: ராதாகிருஷ்ணன்

In இந்தியா
Updated: 08:21 GMT, Apr 16, 2018 | Published: 08:12 GMT, Apr 16, 2018 |
0 Comments
1138
This post was written by : Kemasiya

தமிழ்நாட்டில் எந்த திட்டங்களும் நிறைவேறக் கூடாது என்ற நோக்குடன் சக்திவாய்ந்த பயங்கரவாத இயக்கமொன்று இயங்கி வருவதாக, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துரைத்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“தமிழ்நாட்டில் இடம்பெறும் பிரச்சினைகளுக்கு பின்னால் ஒரு பயங்கரவாத இயக்கங்கள் செயற்படுகின்றது.

அங்கீகாரம் பெற்ற ஊடகங்களை கூட வீழ்த்தும் வகையில் மறைமுகமான ஒரு சக்தி இயங்கி கொண்டிருக்கிறது. அத்துடன் குறித்த இயக்கமானது ஜனநாயகத்தை மீறி செயற்படுமாறு மக்களை செயற்படுத்தி வருகிறது.

மறைமுகமாக இயங்கும் இந்த இயக்கம் எது என்பதை அரசு தான் கண்டறிய வேண்டும். குறித்த இயக்கமானது, தமக்கெதிராக செயற்படுபவர்கள் மீது மறைமுக தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆரம்பத்தில் குரல் கொடுத்தவன் நான் தான். நான்கு நாட்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டேன்.

ஆனால் அப்போது என்னோடு சேர்ந்து போராட யாரும் முன்வரவில்லை. நான் தனித்து நின்று குரல் கொடுத்தும் எனது கருத்தை யாரும் செவிசாய்க்கவில்லை.

அதன் பின்னர் ஆலையின் கட்டட வேலைகள் நிறைவடைந்ததும், அதற்கெதிராக மக்கள் குரல் எழும்பினர். அவ்வேளையில் எனது குரல் ஆலை நிர்வாகத்திற்கு சார்பாக இருந்தது.

ஏனெனில் கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டப்பட்ட தொழிற்சாலையை மூடுமாறு கோருவது எந்தவகையில் நியாயம்? அதனால் ஆலை வேண்டுமென நான் கூறினேன்.

இப்போது காலம் தாழ்த்தி மக்கள் போராடுகிறார்கள். இந்த போராட்டம் ஆலை கட்டப்பட முன்னர் முன்னெடுத்திருக்க வேண்டியதாகும்” என ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)