Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியா மீதான தாக்குதல்: கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்க நேரிடுமென எதிர்பார்ப்பு!

In
Updated: 07:07 GMT, Apr 16, 2018 | Published: 07:07 GMT, Apr 16, 2018 |
0 Comments
1038
This post was written by : Suganthini

சிரிய அரசாங்கத்துக்கு எதிரான தாக்குதலை முன்னெடுக்க ஆதரவளித்தமை தொடர்பாக, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க நேரிடுமென, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) கூடும் நிலையில், சிரிய விவகாரம் தொடர்பாக அவசர விவாதம் நடத்த சபாநாயகரின் அனுமதியை பிரதமர் பெறக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், சிரிய விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளை பிரதமர் எதிர்நோக்க நேரிடுமெனவும், அந்த ஊடகம் கூறியுள்ளது.

கிழக்கு கௌட்டாவின் டவுமா நகரில் இம்மாதம் 7ஆம் திகதி சிரிய அரசாங்கப் படையினர் நடத்திய ரசாயனத் தாக்குதலுக்குப் பதிலடியாக, சிரியாவில் அமெரிக்காவின் தலைமையில் தாக்குதல் நடத்த பிரித்தானியாவும் பிரான்ஸும் ஆதரவளித்துள்ளன. இந்நிலையில், சிரிய அரசாங்கத்துக்கு எதிரான தாக்குதல் நடத்த ஆதரவு வழங்க முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டிருக்க வேண்டுமென,  பிரித்தானியாவின் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இதற்கிடையில், எந்தவொரு எதிர்காலத் தலையீடுகள் தொடர்பாகவும், சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென, பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)