Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உளவாளி விவகாரம்: ரஷ்யா மீது உரிய ஆதாரம் தேவை -கோர்பின்

In
Updated: 07:31 GMT, Apr 16, 2018 | Published: 07:31 GMT, Apr 16, 2018 |
0 Comments
1154
This post was written by : Suganthini

ரஷ்யாவின் முன்னாள் உளவாளி விவகாரம் தொடர்பாக, ரஷ்யா மீது குற்றச்சாட்டை முன்வைக்க முன்னர், பிரித்தானியா உரிய ஆதாரங்களைத் திரட்ட வேண்டுமென, தொழிற்கட்சி தெரிவித்துள்ளது.

பி.பி.சி. ஊடகசேவைக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே, பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ரஷ்யாவின் முன்னாள் உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதை ஏற்றுக்கொண்டுள்ள அவர், எனினும், இந்தச் சம்பவம் தொடர்பாக ரஷ்யா மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில், மறுக்கமுடியாத உறுதியான ஆதாரங்களை பிரித்தானியா முன்வைக்க வேண்டுமெனவும், கூறியுள்ளார்.

ரஷ்யாவின் முன்னாள் உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியாவும் மயக்கமடைந்த நிலையில், பிரித்தானியாவில் கடந்த மார்ச் 4ஆம் திகதி மீட்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பிரித்தானியப் பொலிஸார் விசாரணை நடத்தியபோது, அவர்களின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் வகையில் நஞ்சூட்டப்பட்டமை தெரியவந்தது. இந்நிலையில், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாகப் பிரித்தானியா குற்றஞ்சாட்டியது. எனினும், இக்குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg